அந்த ஆடையை மட்டும் எரித்துவிட சொல்லுங்கள் ம்ம்

அந்த ஆடையை மட்டும் எரித்துவிட சொல்லுங்கள் ம்ம்
===================================================

எனைப்பற்றிய மோகாந்தத்தின் மீதான
எல்லாருடைய தேடல்களுக்கும்
கரும்புள்ளி வைத்துவிட்டேன்
அடிக்கடி காணாமல் சென்று
அடிவயிற்றில் சீதை மூட்டியவளுக்காக ம்ம்ம்,,,,
மிகை நாளாகிற்று
வழக்கங்கள் கிழமைகள் திகதிகள் நேரங்கள் மறந்து
அடுத்தப் படுக்கைக் காரர்
புத்தி புகட்டுகிறார்
"Technically he is fit but functionally
why should not he became up" என்று
என்றைக்கு அவளிற்கு பற்கள் விளக்காமல்
முத்தம் கொடுத்தேனோ
அன்றிலிருந்து நான் எடுக்கும்
Bed coffee யின் சுவை இன்னும் அதிகமாகிறது
கடவுள் எனக்கு எல்லாமே
அதிகமாய்க் கொடுத்திருந்தான்
அவளையும் அவள் பிரியங்களையும் சேர்த்து
ஆனால் அன்று என்னைவிட
அழகானவர்கள் திறமையானவர்கள்
அவளைச் சுற்றி இருந்திருக்கவில்லை
அவளும் மாறவில்லை
நான்தான் மாறிவிட்டேன்
என்னை அவளிடம் சேரும் எல்லாரோடும்
போட்டியாக்கி மேலும் திறமைகளைக்கூட்டி
என்றாவது அவளுக்கு நான்
பிடிக்காமல் போய்விட்டாலோ
என்னை அவளுக்கு மேலும் பிடிக்கச் செய்வதைத் தவிர
என்ன அப்படி பெரிய வேலை இருக்கப்போகிறது
நான் கடலைப்போடும் எல்லோருக்கும்
கடுக்கா கொடுத்துவிட்டேன்
முழுநேரமும்
என்னை மெருகேற்றுவதாய் நினைத்து
மெண்டலாகிக் கொண்டிருக்கிறேன்
ஆனால் அவள் இன்னும் அதே நேசத்தொடே
இருக்கின்றாள்
எல்லா விதத்திலும் அவளை
பெண் செய்திருக்கிறேன் என்று தெரிந்த எனக்கு
அவள் மாறவில்லை என்பதுமட்டும்
ஏனோ புரியவில்லை,,
அவளிடமே கேட்டுமிருக்கிறேன்
அன்று உன்னிடம் பேச யாருமில்லாததால்தானே
என்னிடம் அருகினாய்
இன்றுதான் உன்னிடம் ஏராளமானவர்கள்
இருக்கிறார்களே
இன்னுமேன் உன் அவ்வப்பொழுதுகளின்
தேடலின் கரு
நானாகிப் போகிறேன் என்று
அவளுக்கு இது வலிக்கும் என்றுத் தெரிந்தே
அவள் அருகும் அனைவரையும்
அவளுடன் ஒப்பிட்டு பேசினேன்ம்ம்ம்,,
ஆனாலும்,, அவள் மாறவில்லை
என் மீதான தேடலிலிருந்து ஒளிந்திருக்கவில்லை
ஆம்,, இது பைத்தியக் காரக் காதலா
நான் அவளை சுற்றி அமைத்தது
க்ரூர ப்ரியனின் கிரானைட் சிறையா
அவள் பித்தனானதால்
முகம் தெரியாதவர்களின்
உண்மை சொரூபங்களுடன்
என் பிரிய களத்தின் மேலே
ருத்ர தாண்டவம் ஏன் செய்கிறேன்
மனமழுகிப் போனவன் ஆகிவிட்டேன்
மென்மைத் தழுவல்களால் மெழுகூற்றினாள்
அவள் தேடலும் அசைவுகளும்
எனக்கானதாய் மட்டுமே இருக்குமா
என்று திகைத்துத்தான் அவளை விலக எத்தனித்தேன்
என்னிடம் பேசுகிற போதெல்லாம்
பூக்களில் பனித்துளி படர்வதைப்போல்
பூமேனி நனைகிறாள்
முதல் தருணம் ஆடை வாசத்தை
பற்றிக்கொண்டது நாசி
இந்த குரூரத்தின் பசித் தீர்க்க முடியாதென்று
அறிந்திருப்பாள் ஆனால்
அவள் பிர்யங்களின் படைபலத்தை
என் மீது ஏவி விட்டிருக்கமாட்டாள் போல்,,,
போரில் வென்றவன்
பிரியங்களில் தோற்றுவிட்டேன்
வாய்ப்புகள் கைவிட்டுப்போன பின்னால்
வெறுக்கத் தொடங்கியிருக்கிறாள்
வெறுக்கட்டும் ,,, அதிலாவது முதலிடத்தில்
இருப்பேன் ஆனால்,,
அவளோடு வாழ்ந்து தீராத கொதியோடிருப்பினும்
என் ஆன்மாவின் சுகந்தம்
மோட்சம் பெறாது இருப்பினும்
ஒன்றோடு ஒன்று ஒட்டி போர்த்திக் கொண்ட
ஆடையை மட்டும்
என் மரணத்தின் பின்னால் எழும்பும்
சிதைக்குளியலோடு
எரித்துவிட சொல்லுங்கள்,,,
அவளுள் மண்டிக்கிடக்கும் வெறுப்புகளாய்
பின் தொடர்ந்த
காலங்களை வென்று
இவன் பிரேதமாய் பின் தொடருவானாயின்
மேலும் அச்சமுறுவாள்
கண்ணீரில்லாமல்
எத்தனையோ பேரின்
வெறும் சாபங்களே இருக்கப்போகின்ற
என் பிணத்திற்குமுன்னால்
அவளும்(கண்களும்)
கலங்கிவிடப் போவதில்லையாதலால்
என் நாசி நுகர்ந்த
அந்த ஆடையை மட்டும்
என் மரணத்தின் பின்னால் எழும்பும்
சிதைக்குளியலோடு
எரித்துவிட சொல்லுங்கள் ம்ம்ம்ம்,,,

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (23-Oct-15, 4:15 pm)
பார்வை : 87

மேலே