மாதவிடாய்
கலர் கலர் ரிப்பன்
கலர் கலர் வளையல்
கைக்கு மருதாணி
கழுத்துக்கும் காதுக்கும்
புது புது கவரிங் நகைகள்
வாய்க்குள்ளிலிருந்து ஒழுகி
தாவணி கலரை மாற்றும்
பாலைசுகள் எல்லாம்
வாங்க வேண்டுமென்ற கனவு
ஒரு மாதத்திற்கு முன்பே வந்துவிட்டது,,
கடவுளே!
வருடத்திற்கொரு முறை வரும்
ஊர்த் திருவிழாவன்று மட்டும்,
கொஞ்சம் வராமல் பார்த்துக்கொள்வாயா?
மாதத்திற்கொரு முறை வரும்
மாதவிடாயை .......