அக்கா அடிச்சா - நகைச்சுவைக் கவிதை 7

........................................................................................................................................................................................
“ அக்கா அடிச்சிட்டா...! ”
குழந்தை சொன்னது புகார்..!

“ எப்படி அடிச்சா..? ”
“ இப்பிடி அடிச்சா.. ”

“ எப்படி அடிச்சா..? ”
“ இப்பிடி அடிச்சா.. ”

ஒரு முறை அடித்த அக்காவை சொல்லப் போக

ஒன்பது முறை

தன்னைத் தானே அடித்துக்கொண்டது குழந்தை..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (24-Oct-15, 4:51 pm)
பார்வை : 463

மேலே