நான் ஏன் மாறினேன்

அன்பே உன்னைக் கண்டேன்,
அந்நொடியில் என்னை தொலைத்து விட்டேன்,
தொலைந்த என்னை உன் கண்ணில் கண்டேன்,
அட ஏன் இவ்வாறு மாறி போனேன்?

இதய துடிப்பும் இயல்பாய் இல்லை
இந்த மாற்றம் ஏனோ என்று
யோசித்த கணத்தில் புரிந்துக் கொண்டேன்
என்னிடம் இருப்பது உன் இதயமன்றோ?

நான் பேச நினைத்து வாய் திறந்தால்
கவிதை அல்லவோ வருகின்றது?
என் இப்படி மாறிப் போனேன்?
என் சிந்தனை முழுதும் நீ அல்லவோ?

என் பார்வை, சிந்தனை, செயல்
அனைத்திலும் நீயே இருப்பதால்
நான் நானாக இல்லை
என் உயிரும் எனக்குச் சொந்தமில்லை.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (26-Oct-15, 1:32 am)
Tanglish : naan aen maarinen
பார்வை : 94

மேலே