என்னை வென்றவளே

முதலில் எனக்கு
துனைவியானாய்
பிறகு என்
தோழியானாய்
ஒவ்வொரு
வினாடியும் என்
நாடியோடு
நாடியாய்
கலந்திட்டவளே
உன் மௌனத்தினால்
என் வார்த்தையை
வென்றவளே !
உன் வெட்கத்தினால்
என் பார்வையை
வென்றவளே
உன் பொறுமையினால்
என் வேகத்தை
வென்றவளே
உன் குழந்தை
சிரிப்பினால்
என் வயதினை
வென்று
என்னையும்
ஒரு குழந்தையாக்கி
உன் மடியினில்
தவழவிட்டாய்.

எழுதியவர் : நிஜாம் (26-Oct-15, 11:13 pm)
பார்வை : 4469

மேலே