ஒரு அதிசய கணவன் - மனைவி
அவர்களுக்கு இடையில் எப்பொழுதும் சண்டையே வருவது இல்லை.
இது எப்படியோ பிரபலமாகி, ஒரு பத்திரிக்கை நிரூபர் அவர்களைப் பேட்டி காண வந்தார்.
"உங்களுக்குள் எப்படி சண்டையே வருவதில்லை?"
"மிகவும் சுலபம். சின்ன சின்ன விஷயங்களில் எப்பொழுதும் நான் முடிவெடுப்பேன். பெரிய பெரிய விஷயங்களில் எப்பொழுதும் என் மனைவி முடிவெடுப்பார்"
"அப்படியா, சின்ன விஷயங்களென்றால், என்னென்ன?"
"எந்த கார் வாங்க வேண்டும், எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும், சொந்த ஊருக்கு எப்பொழுது செல்ல வேண்டும், எந்த சோஃபா, ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிஜிரேட்டர் வாங்க வேண்டும், மாதச் செலவுகள், வேலைக்காரி வேண்டுமா வேண்டுமா, இதெல்லாம் சின்ன விஷயங்கள். இதில் என் மனைவி முடிவெடுப்பார்கள். நான் ஒன்றுமே சொல்வதில்லை"
"அப்படியா, பெரிய விஷயங்களென்றால், என்னென்ன?"
"அமெரிகா ஈரானுடன் போர் புரிய வேண்டுமா, பிரிட்டன் ஜிம்பாப்வேக்கு எதிரான் சாங்ஷனை நீக்க வேண்டுமா, சச்சின் டெண்டுல்கர் எப்பொழுது ஓய்வு பெற வேண்டும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டுமா என்பதெல்லாம் பெரிய விஷயங்கள். இதில் என் மனைவி ஒன்றுமே சொல்வதில்லை. நான் தான் முடிவெடுப்பேன்"