காமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்
நாட்டமை - நாட்டாமை! தீர்ப்பை மாத்தி சொல்லு
கல்லூரி மாணவர்களால் பல இடங்களில் ரீ-மிக்ஸ்
செய்யப்படும் வசனம். தியேட்டரில் படம் போடலையா? ஆபரேட்டர், படத்தை போடு.
கரண்டு போச்சா? லைட்டை போடு. இப்படி.
ரெட் - அது...
ஹி... ஹி... இந்த ரெண்டு எழுத்து சாதாரணமான
வார்த்தை, இவ்வளவு ஸ்பெஷல் ட்ரிட்மெண்ட் கொடுக்கும்ன்னு யாரும் நினைச்சு
இருக்க மாட்டாங்க.
ரமணா - தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை, மன்னிப்பு
விவேக்கால் பல படங்களில் கிண்டல் செய்யப்பட்ட
வசனம். மக்களும் அவரவர் வசதிக்கேற்ப வார்த்தைகளை போட்டு பிரபலமான வசனம்.
அந்நியன் - அஞ்சு கோடி பேரு அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுனா
தப்பா?
சுஜாதாவால் சுவையாக கருத்து சொல்லப்பட்ட
வசனம். படம் வெளிவந்த பிறகு டரியல் செய்யப்பட்டது.
சந்திரமுகி - என்ன கொடுமை சரவணன்...
பஞ்ச் டயலாக்கும் இல்லை. உணர்ச்சிமயமா
எழுதப்பட்டு பேசப்பட்ட வசனமும் இல்லை. பின்ன, எப்படி இவ்ளோ பிரபலம்? எல்லா
புகழும் பிரபுக்கே! பிளஸ் வெங்கட் பிரபு.
தேவர் மகன் - ஒரு பாட்டு பட்றி
யாரையாவது பாட்டு பாட சொல்லும்போது, கிண்டலாக
இப்படித்தான் சொல்லுவார்கள். கவுண்டமணி ஏதோவொரு படத்தில் நக்கல்
நாயகன் - நீங்க நல்லவரா? கெட்டவரா?
மணிரத்னம் பட வசனங்களில் ஒரு தனித்தன்மை
உண்டு. அதனாலயே, அதிகம் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும். சின்னி ஜெயந்த்,
விவேக் இதை படங்களில் காமெடி செய்தார்கள்.
முதல் மரியாதை - ஐயா! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
சொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு
உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர்
ஸ்டைலில் முடித்து விடுவார்கள்.
பாச மலர் - என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக்
கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும்.
உணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று
இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள்.