விளம்பரங்கள் - கற்குவேல் பா

சில வருடங்களுக்கு முன்புவரை
சேலை விலகல் காட்சிகளுக்கே
முகம் சுளித்த நாங்கள்தான் - இன்று
உள்ளாடை மட்டும் அணிந்த
முகம் சுளிக்கும் நடனங்களையும்
தொலைகாட்சி விளம்பரங்களையும்
குடும்பத்தோடு ஒருசேர அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறோம் - ஒருவேளை
இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு
நிர்வாணக் காட்சிகளையும் , நீங்கள்
தொலைக்காட்சியில் அரங்கேற்றலாம்
நாங்களும் கண் சிமிட்டாமல்
கண்டு களித்திருக்கலாம் - காரணம்
நாகரிகம் என்று சொல்லிச் செல்லலாம்

- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (27-Oct-15, 9:31 pm)
பார்வை : 94

மேலே