இனியவளே என் இனியவளே இனிஅவளே என் இல்லாள்
இனியவளே என் இனியவளே
இனிஅவளே என் இல்லாள்
================================
இனியவளே என் இனியவளே
இனிஅவளே என் இல்லாள்
இனி அவள் இல்லாமல்
இல்லை இல்வாழ்வு.எனக்கே!
முடிவிலா முதலவன் அருளால்
முன்செய்த நல்வினைப் பயனாய்
முகம் கோணா முத்தழகி கழுத்தில் அன்றே
முடிந்தேன் முடிச்சுமூண்று நன்றே!
முப்பால் பொருள் உணர்ந்து
முக்காலமும் நலமாய் வாழ
வள்ளுவர் வழியினிலே எங்கள்
வாழ்க்கை இரதம் சென்றதே!..
அவள் கிள்ளை மொழியால்
அவள் பிள்ளை மனத்தால்
அவள் துயரம் போக்குவாள்
அவள் ஆனந்தத்தின் ஊற்று.!
பனிமலர் பார்வையால் என்னை ஈர்த்து
பவித்திரத்தை எனக்குத் தந்து
ஆனந்தத்தைக் காற்றில் கலந்து
ஆர்வமுட ன் அள்ளித் தந்தாள்!
துளிர்த்தேன் தளிர்த்தேன் வளர்ந்தேன்
தெளிந்தேன் மகிழ்ந்தேன் இந்நாள் தனி
ஒரு விருந்தேன் அறுந் தேன்
அவள்
அருந்தேன் எனச் சொல்வேனோ!
அவள் தொடங்கும் பணிதுலங்கும்
அவள் அதிசயங்களின் விளைநிலம்
அற்புதங்கள் விளைவிப்பாள்
அருள் பாலிக்கும் அம்மன் அவள்!
அவள் என்பால் காட்டிய அன்பால்
அவள் அனுதினம் அளித்த தெம்பால்
அகத்தே அவள் சிரிக்கும் சிறப்பால்
அருவியென வடித்த கவிதைகள்
தீம்பால்.
இனியவளே என் இனியவளே
இனிஅவளே என் இல்லாள்
இனி அவள் இல்லாமல்
இல்லை இல்வாழ்வு.எனக்கே!