கண்ணாடியாய் நீ
கண்ணீர் தடம் மறையும்
முன்னே காயங்கள் ஏற்ப்பட
கரைகிறேன் நான்..!
என்னை சுற்றி பலர் இருந்தும்
யாருமற்ற தனிமையை
நான் உணர்கையில்...
என்உணர்வுகளை பிரதிபலிக்கும்
கண்ணாடியாய் நீ...!
கவிதையே நீ மட்டும்
இல்லையென்றால்..
என் உணர்வுகள்
எப்போதோ உருத்தெரியாமல்
உடைந்து போயிருக்கும்..!