உனக்காக

மண் மேலே விழும் மழைப் போலவே என் மனதில் வந்து விழுந்தாயே !


இமை மூடும் விழி உள்ளே
உன் உருவம் பதித்தாயே !!


வழி எங்கும் பூத்தோட்டம்
என் தேவதை அதில் நடமாட்டம் போட்டாயே !!!


இதழோரம் சிரிப்பாலே என் இரவெல்லாம் நீ கெடுத்தாயே !!!!


சொல்ல சொல்ல வார்த்தை இல்லை நீ சொர்க்கத்தில் பூத்த அழகு பெண் முல்லையே !!!!!

நீ நடக்கும் பாதையெங்கும் என் நிழல் துணைவர ஒரு வார்த்தை சொல்வாயோ
என் வாழ்வோடு கலப்பாயோ !!!!!!


என்னோடு கைக் கோர்த்து நடப்பாயோ !!!

பதில் அறியாமல் காத்திருக்கிறேன்
நீ வரும் பாதையில் உனக்காக .





படைப்பு:-
RAVISRM

எழுதியவர் : ரவி.சு (28-Oct-15, 8:57 am)
Tanglish : unakaaga
பார்வை : 346

மேலே