நீயும் நானும்

அதிகாலை நேரம்
என் விழியோரம் நீயும்
நீ தருவாய் முத்தம்
நான் எழுவேன் நித்தம்...........!

தேநீர் நீ கொண்டு வருவாய்
உன் இதழில் தேனையும் நீ கொண்டு வருவாய் ..............!
உன்னை வழி மறிப்பேன்
உன் இடை வளைப்பேன்
உன்னை கட்டி அணைப்பேன்
தேனை முதலில் சுவைப்பேன் -பிறகு
தேனீர் கொஞ்சம் சுவைப்பேன்................!


நான் குளிக்கும் முன்னே
நீ குளித்து இருப்பாய்-இருந்தும்
நான் குளிக்கும் போதும்
நீ கொஞ்சம் நனைவாய்...........!
உன்னை கொண்டு என்னை துடைப்பாய்
உன் வெக்கத்தில் கொஞ்சம் என்னை அணைப்பாய்.....................!


நீ சமைத்த உணவை
என்னிடம் கொடுத்து ருசி பார்ப்பாய்................!
சட்டென்று என்னை முத்தமிட்டு
நீயும் கொஞ்சம் ருசித்து பார்ப்பாய்......................!


கண்ணாடி முன் நீன்று உன் அழகை நீ அழங்கரிப்பாய்
பின்னாடி நான் நீன்று உன் அழகை ரசித்திருப்பேன்.....................!
செல்லமாய் உன் காதை கடிப்பேன்
மெல்லமாய் உன்னை கட்டி பிடிப்பேன் .....................!

தாகம் என்று சொல்வாய்
தண்ணீர் கொண்டு வருவேன்............!
கையில் கொண்டு கொடுத்தால்
கண்டு கொள்ளமாட்டாய்.................!
என் இதழளால் கொண்டு கொடுத்தால்
இன்னும் கொஞ்சம் கேட்பாய்.................!

அந்திமாலையில் அழகான வேலையில்
பயணம் இல்ல பாதையில்
கை கோர்த்து நாமும்
போவோம் நாளும்
அன்று நடந்த அனைத்தும்
அழகாய் பேசி ரசிப்போம்
நம்மை நாமே மறப்போம்..................!

இரவு.............!
இருவரை ஒருவராய் ஆகும் உறவு
நமக்குள் நம்மை தேடும் அழகு...........!

தென்றலும் தீண்டாத இடத்தை
விரல்களால் தீண்டும் தருணம்..............!

ஒரு குழந்தையாய் போல்
என்னை உன் மார்போடு அணைப்பாய்
முத்தங்கள் கொடுப்பாய்
என் பசி எல்லாம் தணிப்பாய்.............!

உன் நெஞ்சம்
நான் தூங்கும் மஞ்சம்...............!

எழுதியவர் : சங்கத்தமிழன் (28-Oct-15, 9:03 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 2941

மேலே