டீன் ஏஜ் பையன்

டீன் ஏஜ் பையன்..... கட்டுரை
--------------------------------------------

இளம் பையன்களின் குதூகல காலம் இந்த இளமை பருவம் - டீன் ஏஜ் ...
இது 13 முதல் 19 வயது வரையிலான கால கட்டம்.... பெற்றோரகோ ????

இந்தக் காலத்தில் அதுவும் 16 முதல் 19 வரையிலான நேரம் மிகவும் ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் கொடுக்கும் நேரமாகும் அதிலும் ஒரு தாய்க்கு..

நான் இங்கு பதிவு செய்ய நினைப்பது டீன் ஏஜ் பையன் பற்றிய விஷயங்களை...

ஒரு தாய் தன மகனிடம் 16 வயது வரை மிகவும் நெருக்கமாக இருப்பாள். அதைவிட மிகவும் நெருக்கமாக அந்தப்பையன் தன தாயை சக தோழனாகவே நினைத்திருப்பான்.

ஒரு நொடி கூட அம்மா தன்னை விட்டு பிரிய கூடாது என்பதில் மிகவும் கவனமாக இறுப்பான் 16 வயது வரை...

எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான்... அம்மா சொல்வதை கேட்கிறானோ இல்லையோ மறுக்க மாட்டான்.. தன தாயை யாரும் எதுவும் கூறிவிட கூடாது என்பதிலும் அக்கறை காட்டுவான்..... நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொலைபேசியில் அழைத்து பேசுவான் அலுவலகத்தில் அம்மா இருந்தாலும்...
" படி " என்று அம்மா சொன்னால் செய்கிறானோ இல்லையோ புத்தகத்தை எடுத்தாவது வைத்துக்கொள்வான்... கோபப்பட்டு அம்மா எதாவது கூறினால் ஒன்றுமே நடக்காதது போல் இருந்துவிடுவான்.....

16 முதல் 19 வயது வரை......

எல்லாமே தலை கீழ்...

அம்மாவை பார்த்தாலே ஒரு வித கோபம், வெறுப்பு... ஏன்? என்று இன்னும் ஆராயவில்லை... விரைவில் அதில் இறங்கப்போகிறேன்... எல்லாம் காலத்தின் கோலமாய் தான் தெரிகிறது..

படி என்று சொன்னால் அப்படி ஒரு கோபம் வரும்... தன சக நண்பர்களை பற்றி ஒரு வார்த்தை கூறிவிட்டால் நம்மை சுட்டுவிடுவது போல் ஒரு பார்வை..

எதற்கும் பயம் இல்லை, யாரை பற்றியும் கவலை இல்லை. ஒரு வார்த்தை அம்மா சொன்னால், அதை எதிர்த்து குறைந்தது பத்து வார்த்தைகளாவது பேசவேண்டும் என்பதில் உறுதி...

ஏன், எதற்கு, எங்கே, இப்ப வேண்டாம் என்று எல்லாம் பெற்றோர் கூறிவிட முடியாது.... ஊம் !! என்ற பதில்தான். நீங்கள் என்ன சொல்வது, நான் என்ன கேட்பது???

ஏதாவது சொன்னால்??? உங்களை யார் என்னை பெற்றெடுக்க சொன்னது????

பெரிய தொல்லை ஒன்று.... இரண்டு சக்கர வாகனம்.... அதை வாங்கி தந்தால்தான் உண்டு என்கிற பிடிவாதம்... முதலில் கொஞ்சம் கெஞ்சுவது போல், பிறகு வேண்டும் என்கிற தோரணையில், பின்பு அதிகாரம் மற்றும் கோபம்???? இந்த கால கட்டம் மிகவும் மோசமான காலகட்டம் அவர்களுக்கு இல்லை பெற்றோருக்கு....

எந்த அளவிற்கு அம்மா விடம் நெருக்கமாய் இருந்தானோ அந்த அளவிற்கு இந்த கால கட்டத்தில் அம்மாவை வெறுப்பான்.. அவள் முகத்தை பார்க்க விருப்பம் இல்லை என்றே கூறுவான்..

எது எப்படியோ??? காலம் போய் கொண்டுதான் இருக்கவேண்டும் அல்லவா???
இந்த இளமை பருவம் முடியும் கால கட்டத்தில் எல்லாம் மாறும் .... திரும்பவும் அவன் தான் செய்ததை நினைத்து வருதப்படுவதோடு நிற்காமல் திருந்தவும் செய்வான். இது உண்மை....

இந்த 16 முதல் 19 வரையிலான கால கட்டத்தை மேற்கொள்ளுவது ஒரு அம்மாவிற்கும் , அப்பாவிற்கும் சோதனை காலம்தான்....

காலம் மாறும்... நன்மையில் முடியும்....

திருமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : திருமதி.மைதிலி ராம்ஜி (28-Oct-15, 4:39 pm)
பார்வை : 173

மேலே