அன்புள்ள காதலா.................................
என் உள்
இருதயங்களை
அறிந்து கொண்ட
என் உயிர்
கள்வன் நீ
சத்தமின்றி
வெட்க்கமின்றி
உன்னால்
களவுபோனது
என் பெண்மை
தினம் தினம்
தூக்கத்தில்
புலம்பும் வியாதியை
பரிசளித்தாய்
உன்
முகம் காண
முடியாமல் நான்
தொலைவிலே இருந்தாலும்
உன் புகைப்படத்தில்
உன்னையும்
உன் அன்பையும்
முழுமையாய்
அறிகிறேன்
யாருக்கும் தெரியவில்லை
நான் உனக்குள்
காதல் வயப்பட்டு
கலந்து கொண்டிருக்கிறேன்
என்று
நிலாவையும்
ரசிக்கிறேன்
நான் ரசிக்கும் நிலா
உன் கண்களிலும்
தென்படும் என்ற
நம்பிக்கையில்
உன்னை முத்தமிட
என் உதடுகள் ஏங்குகிறது
உன் கரம் பிடிக்க
என் கரங்கள் ஏங்குகிறது
என் கழுத்தில் நீ
மாலையிடும்
அந்த நாளுக்காக
உன் வரவை எதிர் பார்த்து
மறுரூப மாகிறேன்
இன்றும் உன்னால்....................
இப்படிக்கு...................உன்னவள்