கவலை என் பெயர் கவலை
..."" ""...
அன்பின் ஆளுமையால்
நேசித்ததின் விளைவாய்
பாசத்தின் படிமங்களாய்
ஆழமான ஆணிவேரில்
தளர்சிகள் வரும்போது
வெறுப்பதினாலும் நாமே
வெறுக்கப்படுவதினாலும்
தாழ்வு கோப மனப்போக்கு !!!
சந்தேகத்தில் உருவாகும்
தீயில்லாத புகைமூட்டம்
சந்தோசத்தின் புதைகுழி
சிரியவைகளை பெரிதாக்கி
கண்ணீரை வரவழைத்து
காயங்களை ஏற்படுத்தி
சோகத்தை சொந்தமாக்கி
வேதனை சுமந்துகொண்டு !!!
தனிமையில் நிறுத்தியே
வேடிக்கையே பார்க்கின்ற
கவலையெனும் சாத்தான்
ஆண் பெண்ணென்றும்
வித்தியாச பேதமில்லாது
பிரசவிக்கா குழந்தையாய்
மனதிலே சுமந்துகொண்டு
அலைகின்ற அன்பர்களே !!!
இதனை தொலைத்தவற்கு
நிம்மதியின் இடமதிலே
தங்கமாய் வைரமாய் தக்க
சன்மானம் வழங்கப்படும்
கவலையை கலைந்தே
கண்களை திறந்திடுங்கள்
வாழும்காலம் கொஞ்சமே
மகிழ்ச்சியோடு வாழலாம் !!!
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...