வணக்கத்துக்குரிய காதலியே

வணக்கத்துக்குரிய காதலியே!
வாலிப இருளில்
வாழ்கையைத் தொலைத்து விட்ட என்
வணக்கத்திற் குரிய காதலியே!

உன்
பார்வை என்மேல் படர்ந்தபோது
பரவசம் என்னைத் தொடர்ந்தது..

வெண்ணிலவே! உன்னை
மேகம் மூடிக்கொள்ளும் போது- நான்
சோகம் சூடிக்கொண்டேன்..

உன்
உயிரோடும் கண்களைச்
சந்தித்த போது
உலகமே என் காலடியில்…
உன்
கண்கள் என்னுடன்
கலவி செய்தபோது
அழகுகளின் ஆட்சியாளனாய்
என்னை நானே
முடி சூட்டிக் கொண்டேன்..

உன்
தேகம் கண்டேன்
மோகம் கொண்டேன்
தாகம் தீர்க்கவந்த
மேகம் என்றிருந்தேன்…-- ஆனால்

பாரி வள்ளலாய்ப்
பார்வைப் பரிசில்களை
இரவாத புல்லருக்கும்
எடுத்து நீ வழங்குகையில்
என்னையே நான்
இகழ்ந்து நோக்குகிறேன்.

மான்விழிப் பார்வையினை நீ
வான்மழையாய் வாரியபின்
ஏன் பார்த்தாய் எனை என்றென்
இதயம் கேட்குதடி

பரிசிலாய் நீ
பார்வையை அன்றிப்
படுக்கையைப் பகிர்ந்திருந்தால் கூட
பாவியென் மனம்
பதப் பட்டிருக்கும்..

என்னை நானே குடிவைத்த
இள நிலவுக் கண்களினால்
எத்தனை உள்ளங்களை
இருட்டடிப்பு செய்தாயோ?

எத்தனை இதயங்களில்
உயிர்ப்புகளை உருவாக்கிப்பின்
உருக்குலைத்து விட்டாயோ?

எத்தனை மனங்களில் விஷ
வித்தினை விதைத்தாயோ?
அத்தனையும் தழைத்தால்….
அய்யய்யோ……….

இப்பொழுதும் கூட உன்
பார்வை ஈரம்
பட்டாலே போதும்
பசுமை நெஞ்சில்
பையத் துளிர்க்கும்….

எழுதியவர் : வ.முத்துமணி (30-Oct-15, 4:22 pm)
பார்வை : 118

மேலே