பாவ அழுக்கு

புறத்தின் அழுக்கை நீரைவிட்டு கழுவினேன்
அகத்தை என்ன செய்வேன்
என் அய்யனே
அகத்தை என்ன செய்வேன்
நித்தம் நித்தம் செய்யும் பாவம் அழுக்காக சேருதே
அகத்தை என்ன செய்வேன்
என் அய்யனே
அகத்தை என்ன செய்வேன்
நெருப்பில்லாம புகையுமில்லை
வினையில்லாம பதிவுமில்லை
வாழ்க்கை நெடுந்தூரமில்லை
உன் கணக்கை பார்க்க பூமியில் நேரமில்லை

செய்த பாவம் எல்லாம் உந்தன் தேகம் எரிந்தால் போகுமா
ஆண்டவனை வேண்டிகேட்டால் பாவம் நீங்கி போகுமா
செய்த பாவம் எல்லாம் ஆத்ம கணக்கில் சேரும் மானிடா
தேகம் என்ற கூடு இங்கு கருவி மட்டுந்தானடா
பத்துமாடி வீடு எல்லாம் நீயும் கட்டிக்கொள்ளலாம்
உன் தேகம் தீயில் வேகும் நேரம் நீயும் சட்டிக்குள் சாம்பலாகலாம்

பிறக்கும்போதே பாவம் கொண்டு மண்ணில் வந்து சேர்ந்தோமே
வாழும்போது மேலும் மேலும் பாவமூட்டை சேர்த்தோமே
இறந்தபின்னும் உன்னைச்சேரும் சொத்து எது தெரியுமா
நீ வாழும்போது சேர்த்துவைத்த பாவ புண்ணியந்தான்
வாழும்போதே பெற்றோர்களுக்கு சோறு போட்டால் அது புண்ணியந்தான்
செத்த பின்ன மட்டும் வாய்க்கு அரிசி அது பாவந்தான்

உந்தன் புற அழுக்கை கழுவித்தான்
கங்கையும் அழுக்காச்சு சாக்கடை போலாச்சு

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (31-Oct-15, 7:23 pm)
Tanglish : paava azhukku
பார்வை : 76

புதிய படைப்புகள்

மேலே