மெய்யா பொய்யா

நாம் பிறந்தது மெய்யா பொய்யா?
நாம் வளர்ந்தது மெய்யா பொய்யா?
நாம் வாழ்வது மெய்யா பொய்யா?
நாம் மரிப்பது மெய்யா பொய்யா?

இறந்த பின் வாழ்க்கை மெய்யா பொய்யா?
அடுத்த பிறப்பு மெய்யா பொய்யா?

நேற்றை மீட்டெடுக்க முடிவதில்லை
நாளை, நினைத்தால் உடனே வருவதில்லை
இன்றையும் கட்டுபடுத்த முடிவதில்லை
காலம் மெய்யா பொய்யா?

இப்பொழுது பர்ர்கும் காட்சி
திரும்புவதில்லை, காட்சி
மெய்யா பொய்யா?

நேற்றைய தேவைகள்
இன்று பயன்படுவதில்லை
தேவைகள் மெய்யா பொய்யா?

குரங்கிலுருந்து திரிந்தொமா?
கடவுள் படைப்பால் பிறந்தோமா?
டார்வினின் கொள்கை
மெய்யா பொய்யா?

நம் முன்னோர்களை கடவுளாக வழிபடுகிறோமா?
அன்றைய போலி சாமியார்களை
இன்று கடவுளாக வணங்குகிறோமா?
அல்லது தேவதூதர்களை கடவுள் என்கிறோமா?
பல கடவுள், பல மதங்கள்
மெய்யா பொய்யா?

நாம் களிக்கும், காணும்
மட்டை பந்து போட்டி
மெய்யா பொய்யா?

பண பிரச்சினையில், மனகசப்பில்
உறவை அற்றெரியும் உறவுகள்
மெய்யா பொய்யா?

சிக்கனம் செய்தால்
சிதறும் பந்தங்கள்
மெய்யா பொய்யா?

பிறப்பில் அண்ணன் தம்பி
பத்தில் பங்காளி
தாயூம் சேயும் ஆனாலும்
வாயும் வயிறும் வேறு
முதியோர் இல்லத்தில் பெற்றோர்
தொப்புள் கொடி உறவுகள்

மெய்யா பொய்யா?
தாயிடம் பாசம்
மாமியாரிடம் விரோதம்
நாயின் மேல் ஆசை
பூனையை கண்டால் வெறுப்பு
பாசம், ஆசை,
விரோதம், வெறுப்பு
உணர்வுகள்
மெய்யா பொய்யா?

மரித்த சில தினங்களில்
மறையும் மெய்
மெய்யா பொய்யா?

நிலவை தொட்டது
மெய்யா பொய்யா?

செவ்வாயை தொடவிருப்பது
மெய்யா பொய்யா?

வேற்று கிரக உயிரினம்
மெய்யா பொய்யா?

இதிகாசங்கள்
மெய்யா பொய்யா?

தீயவர்கள் தண்டிக்கபடுவர்
நல்லவர்கள் காக்கபடுவர்
என்ற கடவுளின் வாக்கு
மெய்யா பொய்யா?

இவ்வாறு நான் சிந்திக்கும்
சிந்தனைகள்
மெய்யா பொய்யா?

எழுதியவர் : அசோக் கிருஷ்ணன் (31-Oct-15, 4:30 pm)
சேர்த்தது : அசோக் கிருஷ்ணன்
பார்வை : 79

மேலே