வா பெண்ணே
தனிமைகள் தனிமையை வெறுத்தன,
தத்துவங்கள் மண்ணோடு புதைந்தன,
உலகத்தின் சப்தங்கள் நின்றன,
மௌனங்கள் புவி மேலே பரவின,
தேடல்கள் இல்லாத வாழ்க்கையில்
உன்னை தேடியே என் உடலும் அலைந்தன!!!
♪
என் கனவுக்கு அர்த்தங்கள்
தந்தவளே,
என் காகித்தில் கவிதையாய்
நின்றவளே,
என் வறுமைக்கு கல்லறை
வைத்தவளே,
என் வாழ்க்கைக்கு ஒளியாக
வந்தவளே,
எத்தனை யுகங்கள் நான்
கடந்தாலும் உள்ளத்தில் அழியாமல்
நிற்பவளே!!!
♪
உன்னை நினைக்காத நாளொன்று
இங்கில்லை,
உன்னை பாடாத நொடிஒன்று
இங்கில்லை,
உன்னை நீங்கியே வாழ்ந்ததில்
சுகமில்லை,
உன்னை சேராமல் இருந்தாலே
வாழ்வில்லை,
உன்னோடு இருந்த நினைவுகள்
மட்டும் எனைவிட்டு எந்நாளும்
அழிந்ததில்லை!!!
♪
உன் பக்கத்தில் என் உயிரும்
தொலையவேண்டும்,
உன் பாசத்தில் என் நெஞ்சம்
உருகவேண்டும்,
நான் அழுதால் துடைக்கின்ற
விரலும்வேண்டும்,
உன் விரலாய் இருந்தாலே
மரணம் வேண்டும்,
உன்னோடு வாழ்ந்த நிமிஷங்கள்
அனைத்தனையும் உயிர்பெற்று
எழலவேண்டும்!!!
♪
உலகத்தை கடந்து நாம்
மேலே போவோம்,
நிலவுக்குள் மூழ்கி நாம்
தொலைந்து போவோம்,
வின்மீன்கள் வீட்டினில்
துயில்கள் கொள்வோம்,
பக்கத்து கிரகத்தை நாம்
தாண்டிப் போவோம்,
இடர்கள் இல்லாத வாழ்க்கை
வேண்டி பூமிக்கே மீண்டும்
திரும்பி வருவோம்!!!
♪