தந்துவிடு
அவ்வளவுதானே
எனக்கு
அது ஒன்றும்
பிரச்சனை இல்லை
சிறுவயதில்
நமக்கிடையே
சண்டை வந்த
போதெல்லாம்
நீ கொடுத்த
மிட்டாயை எல்லாம்
திருப்பி
வாங்கிக் கொண்டாய்
அல்லவா ...
இதயம்
வலி
அது இது என்கிற
பம்மாத்துக்கள் எல்லாம்
என்னிடம் இல்லை ...
நான் கொடுத்த
முத்தங்களை எல்லாம்
திருப்பித்
தந்துவிடு
நான்
உன்னிடமிருந்து
விலகிக் கொள்கிறேன் .