nee

நீ -
பேசும் போதெல்லாம்
மௌனம் மறக்கிறேன் ..

வருடும் போதெல்லாம்
தொடுதல் மறக்கிறேன் ..

திருடும் போதெல்லாம்
தேடல் மறக்கிறேன் ..

சிரிக்கும் போதெல்லாம்
அழுகை மறக்கிறேன் ..

தேற்றும் போதெல்லாம்
தோல்வி மறக்கிறேன் ..

நீ -
விலகும் போது
உன்னால் நித்தம் கலங்கி
சித்தம் கலங்குகிறேன் ..!!

எழுதியவர் : உமா அஸ்வினி (31-Oct-15, 10:30 pm)
சேர்த்தது : உமா அஸ்வினி
பார்வை : 156

மேலே