பிரிந்து சென்றாயே

அழகு தேவதை நீ எனை பிரிந்து
ஏன் சென்றாய்
எங்கு சென்றாய்

எனை விட்டு செல்லும் போது
எனையும் ஏன் அழைக்கவில்லை
நீ இன்றி நான் நடை பிணம் என்றறியாதவளா நீ

சட்டென்று இப்பூமியை விட்டு
விலகி சென்ற நீ
சொர்க்கம் தான் சென்றிருப்பாய்
சொர்க்கத்தில் இந்த பாவிக்கு இடமில்லையென்று
எனை இங்கயே விட்டு சென்றாயோ நீ

உனையன்றி வேறொரு நல்லுள்ளம்
யவரிடத்தில் நான் அடைவேன்
என் வாழ்க்கையே நீ தான்
என அறிந்தும்
எங்கனம் எனைப்பிரிந்தாய்

நீ சென்ற இடம் எதுவாயிருந்த்தாலும்
என்னிடம் சொல்லிவிடு
விண்ணை கிழித்துக்கொண்டு வருவதானாலும்
வந்திடுவேன் உன்னோடு

நீ இல்லா இவ்வுலகம்
உலகமல்ல வெறும் நரகம்

நான் அழுவது பிடிக்காத நீ
அழுவதையே வாழ்க்கையாய் கொடுத்து சென்றது ஏன்
என் கண் மணியே...

எழுதியவர் : சதீஷ் குமார் (31-Oct-15, 10:45 pm)
சேர்த்தது : சதீசுகுமரன்
Tanglish : pirinthu sentraaye
பார்வை : 9377

மேலே