தேனாறு ஓடுதடா
மலரை தேடிதான்
மது எடுக்க வண்டினங்கள்
சுற்றிவரும்
ஆனால்
மனிதனும் சுற்றுறானே
மது என்ற விஷம் குடிக்க
முன்பெல்லாம் நாட்டினிலே
பாலாறு ஓடியது
தேனாறும் ஓடியது
விவசாயியின் வியர்வையிலே
இன்றோ மது என்ற தேனாறு
ஓடுதடா விவசாயியின் வியர்வையிலே