லீலையடா நீ எனக்கு

லீலையடா நீ எனக்கு
வீணையடா நான் உனக்கு
கான மழை நான் உனக்கு
கவிதையடா நீ எனக்கு
நீ என் உள்ளத்து கோவிலடா
அதில் நீ உறங்காத தீபமடா
என் மேனியெங்கும் ஓடுகின்ற
ரத்தத்தின் ஓட்டமடா
நடக்க முடியா உன்னை நான்
கூடையிலே சுமக்கின்ற
சுமைதாங்கி கல்லுமடா
அது சுகமான சுமைதானடா

எழுதியவர் : செல்வம் சௌம்யா (1-Nov-15, 8:00 am)
பார்வை : 75

மேலே