மழையாய் நீ பொழிய

கருவேலங் காட்டுக்குள்ள துள்ளிக்கிட்டு போறப் புள்ள‌
மருதாணி வச்சுக்கிட்டு எனைசிவக்க வச்சப் புள்ள
பருந்தாக கொத்தி என்ன வெகுதூரம் தூக்கிச்செல்லு
கரும்பாக பேசி மயக்கும் குறும்பான மாயக்காரி

மொற‌மாமன் என்னை நீயும் நினவால தவிக்கவச்ச‌
கொறகூறும் உலகம் முன்னே ராஜாபோல நடக்கவச்ச‌
அறகொறயா படிச்ச என்ன உன்படிப்பால தெனம்தொவச்ச‌
அறமுழுதும் காத்துப்போல என் மனசுக்குள்ள குந்தவச்ச‌

அரும்பாத மீசஎனக்கு உம்மேல முழுசா கிறுக்கு
பொறுப்பாக பேசிமயக்கு வாங்கித்தாரேன் உனக்கு முறுக்கு
குறும்பாவா கொஞ்சம்மாறி சிறு ஆச்சரியங்கள் எனக்குத்தாவேன்
பருப்பாக மாறிடாதே எனைவிட்டு தூரம் போகிடாதே

கருப்பான உன்னைக்கண்டு ஆனேனோ தேன்குடிக்கும் வண்டு
நொருங்கித்தான் போயிருந்தேன் இப்போ உன்னாலானேன் பூச்செண்டு
பெரும்பாலும் உன்னத்தாண்டி நாள்முழுதும் நினைச்சிருப்பேன்
வரமாக மாறிநீயும் மழையாய் பொழிய தவமிருக்கேன்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-15, 8:35 am)
பார்வை : 238

மேலே