காதல் பிரிந்த பின் - 1

பதட்டம் இல்லாத குரலில் அவள்,
என்ன சொல்ல போகிறாள் என்ற
கலக்கத்துடன் மறுமுனை அவன்,
நீ எப்படி இருக்கிற என்ற அவன் கேள்விக்கு அவள் பதில்கள்...

நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்,
நீ என்னை பிரிந்த பின்னும் எனக்கு ஒண்ணும் வலிக்கல,
எனக்கு கண்ணீர் ஒண்ணும் வரல்ல,
நீ சொன்ன மாதிரி நான் எப்பவும் சிரிச்சுகிட்டு தான் இருக்குறேன்!

நீ என்ன நெனச்சு கஷ்ட்டபடாத,
இப்போ எல்லாம் உன் நெனப்பு அதிகமா இல்ல,
உன்ன மறந்துட்டேன்னு நினைக்குறேன்,
ஒரு வேள உன்ன விட அழகான,
உன்ன விடபாசம் காட்டுற
பையன் எனக்கு கிடைக்கலாம்,

உனக்கும் நல்ல பொண்ணு கிடைப்பா
நான் prayer பண்றேன்,
சரி அம்மா வந்துட்டாங்க
நான் அப்புறம் பேசுறேன்...

பெண்கள் கண்ணீரின்
மறு பெயர் அம்மா என்று
யார் மாற்றி வைத்ததோ!

புன்னகை வார்த்தையில் சிதற விட்டவள்
கண்களில் ஏனோ கண்ணீர்!
கண்களில் வந்த கண்ணீர்
அவள் இதயம் நனைத்து குரலை கலைத்து
அவன் மனதிற்கு வேதனை தரும் முன்
பொய்யால் அலைபேசி துண்டித்து அழுகிறாள்!

அம்மாவிடம் சொல்லி அழவும் வழி இல்லை,
சோகங்கள் சொல்லி அழ அருகில் தோழியும் இல்லை!
அவனை நினைத்து தன் மனதில் கதறி அழும் குரல் கேட்க
அவனும் அருகில் இல்லை!

அனைத்து வலிகளையும் மனதில் புதைத்து
புன்னகையுடன் உலா வரும்
நிலா தான் பெண் அவள்!

எழுதியவர் : செல்வமணி (1-Nov-15, 10:51 am)
பார்வை : 81

மேலே