அம்மா

பயமாக இருக்குது அம்மா
கருவறையின் இருட்டிலே
வெளியே என்ன இருக்குதுன்னு தெரியல
உள்ள ஒன்றுமே இல்லை
தொப்பில் கொடி தொட்டு ஊஞ்சலாட
வயிற்றினுள் இடமும் பத்தல
நீங்க எப்போ வந்து கூட்டி போவீங்கனு
நான் காத்து கிடக்க
மூச்சு விடவே ரொம்ப கஷ்டமா இருக்குது
சீக்கிரமா வந்து கூட்டிப் போங்க அம்மா