காத்திருக்கும் என் காதல் அத்தைமகள்
பெண்ணே......!
சிறுவயதில் என்னிடம் அந்நியமாய் நீ
காரணம் இல்லாமல் உன்னை காயப்படுத்தினேன்-அன்று முதல்
உன்னிடம் அந்நியமாய் நான்.............!
உன் முகம் பார்க்கூட மனமில்லாமல்
அங்கும் எங்குமாய் திரிந்தேன்........!
இப்படியே சென்றது பல காலம்..............!
பட்டாடையில் சென்றவள்
பருவ மாற்றம் அடைந்து
அழகும் மேழுகேறி
உன்னை பார்கையில்
முதன் முதலாக பூத்தது
என் காதல் .............!
நீ என் வீட்டிருக்கு வரும் செய்தி
யாரும் அறியும் முன்னே
என் இதயத்தில் தோன்றும் உன் நினைவுகள் - இது
மெய்யா பொய்யா என்று உன்னை எதிர் பார்த்து
காத்திருக்கும் தருணம்
நீயும் என் எதிரில் வந்து நிற்ப்பாய்...........!
நீ வந்தால் வா என்றும் சொல்லாமல்
நீ சென்றால் எதும் சொல்லாமல்
பார்வை இருந்தும் உன்னை பார்க்காமல்
வார்த்தைகள் இருத்தும் பேசாமல்
உன்னை மீண்டும் கஷ்டபடுத்தினேன்....................!
ஒவ்வொரு முறையும்
உன்னை வழியனுப்ப
உன் வழி துணையாய் நான் வருவேன்
நீ என்னை உன் வாழ்க்கை துணையாக
ஏற்பாய் என்று.......................!
உன்னை அனுப்பி வீடு திரும்பிய நாட்கள்
என் மனதின்
வலிகளை என் தலையணை
மட்டுமே அறியும்..........................!
உன் புகைப்படத்தை பார்த்து
தினமும் நூறு முறையாவது
மனிப்பு கேக்கிறேன் .........................!
உன்னிடம் பேசிட வார்த்தைகளும்
கொஞ்சம் கொஞ்சமாய் நெஞ்சை கிள்ளும்..................!
உன் மேல் கொண்ட காதல்
மெல்ல மெல்ல உயிரை கொள்ளும்..............!
உன்னிடம் தனிமையில் ஒரு நாள் சந்தித்து
என் மனதோடு இருக்கும்
காதலையும் வலியையும்
உன்னிடம் சொல்லி
உன் மடியோடு சாய்ந்திடும்
காலத்தை எதிர் பார்த்து
காத்துகொண்டு இருக்கிறது
என் காதலும்
என் காலமும்................................!