மறக்க முடியவில்லை காதல்
அன்பே!
நீராய் வந்து
உன் குருதியில் கலப்பேன்..
நிலமாய் இருந்து
உன்னை சுமப்பேன்..
வானமாய் இருந்து
உனக்கு குடை பிடிப்பேன்..
நெருப்பாய் இருந்து
என்மீது நீ கொண்ட வெறுப்பை எரிப்பேன்..
தனிமை சுட்டதில்லை
உன் மௌனத்தை நான் காணும் வரை
வாழ்க்கை வாழப் பிடிக்காமல் போனதில்லை
நீ என்னை பிரிந்த நாளில் நான் வாழ்ந்த வரை
மறக்க விரும்பவும் இல்லை...
காதலும் கற்று மற...
கற்றேன் ஆனால்
மறக்க முடியவில்லை...!!
மறக்க விரும்பவும் இல்லை...!!