புரட்சிப் புத்தகம்

புரட்சிக்குப் புத்தகம் எழுதி
வெளியிட்டான் ஏழைக் கவிஞன்
வழங்குபவரும் பெறுபவரும்
தலைமை தாங்குபவரும் மற்றவரும்
விலை கொடுத்தே வாங்கவேண்டும்
என்று அறிவித்தான் !
மேடையிலும் இரசிகர்களிடை யேயும்
ஒரு தளர்ச்சி , மனத் தளர்ச்சி !
புத்தகத்தின் பெயர் எழுச்சி !
----கவின் சாரலன்