கவித்துளிகள் - 3

ஜன்னலில் குருவி
தனிமையில் தாத்தா
மருந்தெடுக்க நேரமாச்சு

**********************************************
கன்றுக்குட்டியின் குரல்
அலைபேசியின் அழைப்பு
அம்மாவைத் தேடும் குழந்தை

************************************************

கட்டிய வேலி உயரம்
எட்டிப் பார்க்கும் மாமரம்
நிழலோடு மாம்பூ வாசம்

*************************************************

கிணற்று நீர்
நிலவின் நிழல்
பாயும் தவளை

**************************************************

இரவெல்லாம் முதியவர் இருமல்
திளங்கத் தொடங்கும் விடிவெள்ளி
மெலிதாய் குறட்டை

****************************************************

எழுதியவர் : ஜி ராஜன் (2-Nov-15, 10:17 am)
சேர்த்தது : ஜி ராஜன்
பார்வை : 93

மேலே