மறுமலர்ச்சி
மூடிக்கிடக்கும் மலர்
மீண்டும் மலர்ந்தால்
மறு மலர்ச்சி
முடங்கிக் கிடக்கும்
மனம் மீண்டும்
விழித்து எழுவதும்
மறு மலர்ச்சி
உணர்ச்சியும் இன்றி
மறுமலர்ச்சியும் எழுச்சியும் இன்றி
மனம் முடங்கிக் கிடந்தால்
அது வினோத மனத் தளர்ச்சி
அதை மூலிகை மருத்துவத்தால்
குணமாக்கிட முடியாது.
அதற்கு மூளையின் மூலத்திலே
செய்ய வேண்டும் ஆராய்ச்சி !
----கவின் சாரலன்