விடை என்னவோ
விடை என்னவோ??
ஓரடி தூரத்தில் உன் விழிகண்டு - உன் திருவடியில் இதழ்பதிக்க ஆசைகொண்டேனடி !!
சொல்நயம் பொருள்நயம் எதற்கடி
உன்னைப்பற்றிய கவிதைக்கு?
மென்மை பிறந்தது உன் கையிலா?
உண்மை கூறு! ஓர்நாள் பற்றுவேன்! உணர்வேன்!
மெத்தையும் குளிர்காற்றும் எதற்கடி?
மரத்தடி நிழலில் என் மடி தருகிறேன்
வாடகை ஒன்றும் தரவேண்டாம்!
வெண்மனதிலும் சிறுஇடையிலும் இடமொன்று வேண்டுமடி! - என்
வாழ்விற்கும் உறக்கத்திற்கும் இவையே ஏற்றவை!
கவிதையா?? நான் எழுதுவேனா?
கேள்விகளுக்கு விடை கிடைத்ததோ என்னவோ?
தெரியவில்லை! ஒன்றும் புரியவில்லை!
மனம்கனிந்த பாடலில் நான் நாயகன்! நாயகி நீ!
விழிகள் திறந்திருப்பினும் இதே நினைப்பு!
பகற்கனவோ? பொய்த்துவிடுமோ? ஐயம்தான் என்னுள்!
எதோ ஓர் தைரியம் எழுதிவிட்டேன்!
எடுத்து வந்துவிட்டேன்! உன் கையில் தந்துவிட்டேன் ! விடை என்னவோ??