மழை வரும் நேரங்களில்-கார்த்திகா

விரல் தொட்ட
மழைத் துளிகள்
வர்ணம் பூசியதில்
வானவிட்கள் புதிதாய்
கரங்களில் முளைத்தன..

பூக்களை சிறையிட்ட
தென்றல் மழையில்
சரணடைந்து குளிர்க் காற்றாய்
வசீகரிக்கும் இங்கே!

செல்லக் கிளிகளின்
சிறகுகள் அணைப்பினில்
மெல்லத் துளிர்க்கிறது
முத்து மழைத் துளி...

நான் நடந்த சாலை வழி
ஓடி பளிங்கை ஊற்றுகிறாள்
மழைத் தோழி!

வாய் திறந்த மொட்டுகளில்
தேனாய் இனிக்கின்றன
செல்ல மழைத் துளிகள் !!

எழுதியவர் : கார்த்திகா AK (2-Nov-15, 10:07 am)
பார்வை : 361

மேலே