நாளையென்ற நினைப்பிருந்தால்

வலிக்கட்டும்
குருதி வழியட்டும்
இவையெல்லாம் ஆறட்டும்
கடந்துப் போகட்டும்

விடாபிடி வேண்டாம் விட்டு விடுங்கள்
எல்லாம் காயந்துப் போன தோரணம்
விதைகளாகட்டும் உரங்களாகட்டும்
உறங்கட்டும் உறவாகட்டும்

வடுகளில் வாய்த்த வாழ்க்கை சுவையே
சுவாரசியமானது சுமைசமைத்து பந்திப்போட்டு பசியாற்றிய பகடுபகைத்த சுகாதாரங்கள் அழுக்கெனினும்
சுத்தமாகும் அழுகை நதிகள் கழுவும் செய்யாத பாவங்கள் கேளாத சாபங்கள்

ஆன்மா நிறைந்த நிறைத்த யாக்கைகள் சக்கையாகும் சருகளாகும் மண் வளர்த்த புழுமேயும் முன்
வாழ்ந்திடு அங்கங்கே ஆங்காங்கே வீழ்ந்திடு நிலவாசனை நுகரந்திடு
மண் ஒட்டட்டும் தெரிநிலை புதைநிலை மீசைகளில்
தட்டிவிட்டு தலைநிமிர் வைத்துக்கொள் சிறுதிமிர்

கரடு முரடே இரகசியப் பாதைகள்
வாகையெல்லாம் வசீகர குழிகள்
பயம் எரித்து எதிர்த்து வா !
குதித்து குதித்து எழுந்து வா !
நாளையென்ற நினைப்பிருந்தால்
இன்று என்பது உனதே...!!!

எழுதியவர் : குறஞ்சிவேலன் தமிழகரன் (2-Nov-15, 1:56 pm)
பார்வை : 68

மேலே