இன்றிரவு

இன்றிரவு
விவித பாரதியில்
உனக்கும் பிடித்த
வாராயோ வெண்ணிலாவே
நேயர் விருப்பமாய்
ஒலிக்க நேரலாம்

எதிர் வீட்டு மாடி ஜன்னலின்
வெளிச்சக் கசிவில்
சிரிப்பொலி
கேட்க நேரலாம்

சில நாள்போல்
11 மணி ஸ்ரீதேவி பஸ்
ஹாரன் அடித்தபடி
என் அறை கடக்கலாம்

தூக்கம் வராது
தவிக்கையில்
இரண்டாம் ஷோ
சினிமா கூட்டத்தின்
சலசலப்பை
கேட்க நேரலாம்

அல்லது
தூங்கிப்போக
கனவில் நீயும் நானும்
,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,


காலையில்
துணி துவைப்பேன்

எழுதியவர் : (2-Nov-15, 2:02 pm)
பார்வை : 88

மேலே