நம்பிக்கை

நம்பிக்கை
வாழ்ந்த நாட்கள் போகட்டும்
இனி வாழும் நாட்களாவது நலமாகட்டும்
தொலைந்து போன நினைவுகளைத் தொடுவதே
நம் வாழ்க்ககையல்ல
நிலையான இந்த உலகத்தில்
சில நாட்களாவது நிம்மதியாக
வாழக் கற்றுக்கொள்
போட்ட விதைகளெல்லாம் முளைக்காது
அது நிலத்திலற்குத்தான் சொந்தம்
நம் வாழ்க்கைக்கு அல்ல
நேற்று என்பது ஏணி
இன்று என்பது படிக்கட்டு
நாளை என்பது நம்பிக்கை

எழுதியவர் : பெ. பால்முருகன் (2-Nov-15, 2:26 pm)
சேர்த்தது : கவி பாலு
Tanglish : nambikkai
பார்வை : 78

மேலே