விசித்திரமே
வெளியிலிருந்து பார்க்கும்
பார்வைகளில்
உள்ளிருக்கும் உண்மைகள்
உணர முடியாது!
உமக்கு அவரும்
அவருக்கு நீவிரும்
விசித்திரமே! கேலி
சித்திரமே!
வார்த்தைகளில் விளங்கிடும்
அர்த்தங்கள் கூட
வேடிக்கைகளையும்
வேதனை அக்கிரமங்களையும்
அரங்கேற்றிடலாம்!
வாழ்க்கையின் நியாய அநியாயங்களோ
வேதனை உண்மைகளோ
வாக்கியங்களில் சில
வார்த்தைகளில்
நிறைவுப் பெறுவதில்லை!
வேடிக்கைகளை வாடிக்கையாக்கி
வேதனைகளை பரிசாக்கி
சோதனைகளை சாதனைகளாக்கி
விளங்கிடுவதில்லை வாழ்க்கை!
வியாக்கியங்கள் எல்லாம்
துர்பாக்கியங்களின் சான்றாய்
வளர்ந்து நிற்கும்!