புத்தனாக

பழையப் புத்தகங்களே
புத்தராகும் என்றால்
புத்தகங்கள் உணர்த்திடும்
நன்னெறிகள் படித்தறிந்து
பின்பற்றினால்
புத்தராய் நாமே
புகழப்படலாம்!
நாளைய உலகம்
நல்லோர்களால் சூழப்படலாம்!
பாலுடன் நீர் கலந்திடினும்
நீரைப் பிரித்து பாலை அருந்தும்
அன்னப்பறவையாய்
தீமையை நீக்கி
நல்லறிவை வளர்த்திடில்
நாமும் அமைத்திடலாம்
நல்லுலகம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (2-Nov-15, 4:12 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 60

மேலே