அவன் செய்த கொலை
சயனிக்கிறேன்..........
மேவுகிறது இமைகளை பெருக்கும் கண்ணீர்,
கடினமானதை உடைக்கலாம்,
மென்மையை கசக்குதல் மேன்மையா?
சொல் !
என்னவனா என்று தற்சமயம் தெரியாதவனே !
உனக்காக வாழ்ந்தேன்,
உறவுகள் துறந்தேன்,
நீமட்டுமே என் அங்கமாகவும் தங்கமாக்கவுமிருந்தாய் !
கண்ணடியை கூட கல்லடியாய் பாவித்து,
கண்மணியுள் காத்தேன் உனை,
உன் நிழல்பட்டபோதேல்லாம் நிறைய குளிர்ந்தேன் !
விரல்பட்ட நொடியிலோ விண்ணுலகம் அடைந்தேன் !
நாயாய் திரிந்த மனதை தாயாய் மாறித்தடவினாய் !
நோயில்விழுந்த பொழுதுகளில் சேயாய் அருகிருந்தாய் !
எல்லாம் இறந்த துளிகளாய் இறங்குகிறது கண்ணைவிட்டு,
ஓர்நாள் வந்த கருத்துவேறுபாடு,
வார்த்தை தடித்ததில் ஆனது ஆழிப்பேரலையாய் !
அடித்துக்கொண்டுபோனது நம் அழகான உறவை !
வராமலேயே போயிருக்கலாம் அந்த நாள்,
வந்திருந்தாலும் நிகழாது போயிருக்கலாம் நம் சந்திப்பு !
என்ன புலம்பி என்ன நடக்கும்?
நீ இல்லையே என் சுயத்தின் நிஜமே !
மன்றாடிக்கேட்கிறேன் மண்டியிட்டு உன்னிடம் !
வந்துவிடு அன்பனே அந்தி சாய்வதற்குள் !
நொந்துவேகும் உயிருக்கு கொஞ்சம் அன்புகொடு !
தவறுகளை ஏற்கிறேன் !
தலைகவிழ்ந்து அழுகிறேன் !
எவரோ சொன்னார் !
உனக்கும் எவருக்குமோ திருமணமாம் !
தாங்கவொணா சோகம் சுமக்கும் எனை !
தூங்கியெழ வைத்துவிடாதே உடல்விட்டு !
என் உயிர் உன்னோடு திரியும் ஆட்டுக்குட்டி !
ஏற்கனவே கொன்றுவிட்டாய் மனதை !
தீர்த்துவிடாதே மிச்சமிருக்கும் உடலையும் உயிரையும் !
நான் உன்னால் கொண்டாடப்பட்டவள் தேவதையாய் !!