நட்பு எனும் பூ

உலகத்துப் பூக்களில்
உன்னதப்பூ நட்பு
அதை
உண்மையாய்ப் போற்றாவிடில்
அது உன் தப்பு
இரு இதயங்களின்மீது
அன்பு என்ற தேனீ புலரும்போது
நட்பு என்ற பூ மலர்கிறது
இந்தப்பூ எவ்வளவு
ஜனிக்கின்றதோ
அவ்வளவு
இனிக்கின்றது வாழ்வு
இந்தப்பூ நண்பன்
உயரத்தில் இருக்கும்போது
பார்ப்பதல்ல
அவன் துயரத்தில் இருக்கும்போது
காப்பது
இது மணம் வீசி
வரும் பூவல்ல
இரு மனம் பேசி
வரும் பூ
அடுத்தவர் மனம்
கவரும் பூ
தொடுத்தவரே கசக்கும்போது
மனம் கலங்கும் பூ நட்பு
என்றும் வாடாத பூ
புயலுக்கு அஞ்சி
ஓடாத பூ நட்பு
பூவைக்கும் கற்புண்டு
இந்தப் பூவிற்கும்
கற்புண்டு
இந்தப்பூ விற்பனைக்கல்ல
கண்ணதாசன் சொன்ன
கற்பனைப்பூ நட்பு
மரத்தில் பூப்பதில்லை
மனத்தில் பூப்பது நட்பு
முட்பூ தரும் வாசம் சிறியது
நட்பு தரும் பாசம் பெரியது
நன் பணத்திற்கு
விலைமதிப்புண்டு
நல்ல
நண்பனுக்கு விலைமதிப்பில்லை
எறும்புகளின் நட்பு
சேமிப்பின் எடுத்துக்காட்டு
காக்கைகளின் நட்பு
சேர்ந்து உண்ணலின் எடுத்துக்காட்டு
மனிதா நீ
என்றும் உண்மை நட்பினை
உன் மெய் நட்பினை
தோழன் துயரத்தில்
எடுத்துக் காட்டு