உதிர்ந்த சருகுகள்

நண்பன் பிரிந்தால்
தனிமை வழி மரணம்
மரணித்து நிற்கிறேன் நண்பா!!

விதி ஒரு மாயக்கோள்!
அன்று சேர்ந்தால்தான் வாழ்வென்றது
இன்று பிரிந்தால்தான் வாழ்வென்கிறது!

ஏழு மலைகள், ஏழு கடல்கள் எல்லாம்
கதையினுடே ஒன்றாய் சுற்றித்திரிந்த
நம் உறவு
இன்று ஏழு மலைகளையும் கடலையும்
கடந்து skypeஇன் வழியில்
என்னிடம் கதைக்கிறது !!

எங்கள் வீட்டின்
சமையலறை வரை வந்து
தொப்புள்கொடியாய் மாறிய நீ
இன்று watsappனுடே
என் தங்கையின் கல்யாணத்துக்கு
வாழ்த்து சொல்கிற தூரம் சென்றுவிட்டாய் !!

முன்னொரு மழை நாளில்
நாம் சென்ற தொலைதூர பயணங்கள்!
மேகத்தினூடே நாம் வரைந்த கோளங்கள்!
மாலை நேரரயில் பயணம்!
இருள் சூழ்ந்தபின் சுற்றித் திரிந்த-நம் நகரம் !
இன்று நீ இல்லாத வெற்றிடத்தை சொல்கிறது நண்பா!!

நாம் அமர்ந்திருந்த குட்டிச்சுவரும்
அதில் கரைந்த இனிமை காலமும்
இப்போது எட்டி காய்யைபோல்
கசக்கிறது நண்பா!!

இரவு வானத்தின் அடிககோட்டில் மின்னும்
நட்சத்திரம் நாம் சேர்ந்திருந்த நாட்கள்!!
இன்னும் கொஞம் சுகந்த வாசனை
அதில் நீர்த்து நிற்கிறது
அது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை
நீ வரும்போது மட்டும் வீசிமறைகிறது
அதுவும் உனக்கும் எனக்கும்
வாழ்கை துனை வரும் வரை மட்டுமே!!

நரைகூடி
கிழபருவமேய்திய
முதிர் நாளில்
walking வரும்போது
நாமிருவரும் சந்திக்க கூடும்
சில நேரம் பேசி சிரிக்ககூடும்

பின் ஒரு இலையுதிர் காலத்தில்
நாம் இருவரும் சருகாகக் கூடும்
அதுவரை அந்த தங்க நாளின்
மிஞ்சி நிற்க்கும் துகள்கள்
என் மனதில் மின்னி மறையக் கூடும்!!

எழுதியவர் : (2-Nov-15, 11:07 pm)
சேர்த்தது : அபிஷேக்
பார்வை : 1028

மேலே