கல்லூரி கடைசி நாள்
கல்லூரியும் கருவறை
சுமக்கும் தாய்மை தான்.....
நட்பும் கூட கற்பை போல தூய்மை தான்....
நட்பாலே அமையனும்
பூமி பொதுவா....
நண்பர்கள் பிரியாத
வரம் வேண்டும்
இறைவா.....
கல்லூரி நினைவுகள்
யாவும் கண்ணீரில்
நனைகிறது......
பிரிகின்ற கடைசி நொடியில் இதயங்கள்
வலிக்கிறது.....
கல்வி தந்த கல்லூரியே
வருகின்றோம்......
வாழ்வு தந்த வள்ளல்களே
வருகின்றோம்....
வரவேற்ற வாட்ச்மேனே
வருகின்றோம்...
உணவு தந்த
உணவகமே
வருகின்றோம்.....
உறக்கம் தந்த
விடுதியே
வருகின்றோம்.....
நிழல் தந்த
மரங்களே
வருகின்றோம்....
நினைவுபடுத்தும்
நெஞ்சங்களே
வருகின்றோம்....
பிரியமுடியாமல்
நாங்கள்
தவிக்கின்றோம்.....
பிரியம் இல்லாமலே
இங்கிருந்து
பிரிகின்றோம்.......