காதல் சொன்ன வார்த்தை

அவளது மெல்லிய மூச்சுக் காற்று
கடும் புயலாய் தாக்கியது.
அவளது பூவிதழ் பார்வை
அம்பெய்து காயம் ஆக்கியது.
அவளது வானவில் சிரிப்பு
இடி போலே இறங்கியது.
அவளது இறகு போன்ற உடல்
மலை போன்று அழுத்தியது.
அவளது சிற்றலைகளான பேச்சு
ஆழி போல அழித்தது.
பின்பு,
அவளது காதல் சொன்ன ஒருவார்த்தை
............................
நான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.