நானும் நிலவும்

முன்னிரவு நேரம்
என் சன்னலோரம்
விழாத மழை-அன்று
விழுந்துஅழ ரசித்திருந்தேன்..

மழைவேண்டிய பக்தரெல்லாம்
மழைத்துளி கண்டு
ஓடிய ஓட்டம்
வேண்டாத குழந்தைகூட்டம்
மழைகண்டு ஆடியஆட்டம்

தூரத்தில் சிட்டொன்று
சில்லென நனைந்திருக்க
அய்யோ நனைகின்றாளென..
அவளன்னை துடித்திருக்க

சாலையோர சமபந்தி
சளைக்காமல் நடந்திருக்க
இடைபுகுந்த நம்மவரோ
மழைமீது சலித்திருக்க

நன்மையிலும் தீமைகாணும்
நன்மக்கள் இவர்களென..
பேசாமல் பேசிக்கொண்டே

மழைக்கால இரவில்
மதிமயக்கும் மழையையும் மீறி
நடந்த காட்சியெல்லாம்
நானும் நிலவும்..
நனையாமல் ரசித்திருந்தோம்..
$ மூர்த்தி

எழுதியவர் : (3-Nov-15, 12:19 pm)
பார்வை : 124

மேலே