வசியமுடன் சிரித்திடுதே

விண்மீன்கள் கண்சிமிட்டி மின்னிக் கொஞ்சி
***விளையாடும் இரவினிலே நாளும் வானில் !
வெண்மொட்டு அந்தியிலே அவிழும் போது
***மென்வாசம் பரவிடுமே தென்றல் காற்றில் !
மண்டூகம் குரலோங்கக் கத்துஞ் சத்தம்
***மழையடித்து விட்டதுமே கேட்கும் காதில் !
வண்ணத்துப் பூச்சிக்கு மதுவைத் தந்து
***வசியமுடன் சிரித்திடுதே வண்ணப் பூவே ....!!