ஞானம்
ஞானம்...!
மாறும் -
உருவு கண்டு
வருவதன்று...
மனதின் -
உணர்வினாலே
வழிவது அன்பு...!
வெறும் -
கல்லுக்குள்
ஈரம் கண்டு...
மெய் -
கருணை
செய்யும் தீரம்...!
எந்த -
சொல்லுக்கும்
அடங்கா ஞானம்...!
இந்த -
பிள்ளைக்கு
தானே தோன்றும்
பேருபகாரம்...!
எந்த -
எல்லைக்கும்
அப்பால் இலங்கும்
இரக்க மென்றாகும்...!
கள்ளமில்லா
நெஞ்சே...
கடவுளின் -
கோயிலாகும்...
அங்கு -
கற்களும்
தெய்வமாகும்...!