சந்தோஷம் மனதைப் பொருத்திருக்கும்
8. சந்தோஷம் மனதைப் பொருத்திருக்கும்
ஏர்வாடா சிறையில் தங்கியிருந்தபோது ஒரு சமயம் கனடாவிலிருந்து குல்சேன் லம்சுடேன் என்ற பெயருள்ள ஓர் மாதுவிடமிருந்து கடிதம் வந்தது. அவள் எழுதியிருந்தாள், சர் ஹென்ரி லாரன்ஸ் தம் நாட்டில் வந்து தங்களைப்பற்றிக்கூறும்போது பூனாவில் தங்களை அவர் சந்தித்ததாக்க் கூறினார். தங்களைத்தனி அறையல் பூட்டி வைத்திருந்ததாகவும், அறையின்முன் ஓர் தோட்டம் இருந்ததாகவும் அவர் கூறினார். அப்போது கிபன் எழுதிய ‘ரோமாபுரி சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்னும் பத்தகத்தைப்டித்துக்கொண்டிருந்தீர்களாம். தாங்கள் மிகவும் சந்தோஷமாகவும் இருந்ததாகவும் அவர் கூறினார். நான் அவரிடம் ‘இது கட்டுக்கதை போலிருக்கிறுது’ என்றேன். சர்ஹென்றி ‘நீ வேண்டுமானால் பத்துவருடத்திற்கு முன்னால் நடந்த இந்தச் சந்திப்பு உண்மைதானா இல்லையா என்று காந்திஜீக்கே கடிதம் எழுதிக் கேள், ஆம், ஒருவேளை காந்திஜீயின் ஞாபகசக்தி குறைந்து போயிருந்தால் அது வேறு விஷயம். ஏனென்றால் அவருக்கோ வயது 62 ஆகிவிட்டது’ என்று கூறினார். தங்களுடைய ஞாபகசக்தி எப்பொழுதும் குறைந்திருக்காது என்பது என் திடமான நம்பிக்கை. ஆகையால் சர் ஹென்றி லாரன்ஸ் சொன்ன செய்தி எவ்வளவு தூரம் உண்மை என தங்களைக் கேட்கிறேன்.”
காந்திஜி கடித்த்திற்கு பதில் எழுதச செய்தார். ‘தாங்கள் இந்தமனிதர் சொல்லும் உண்மையில் சந்தேகப்படகிறீர்களா?” என்றார் மகாதேவதேசாய்.
அப்போது சர்தார் வல்லபாய் படேல் அங்குதான் உட்கார்ந்திருந்தார். அவர், ”இந்த மனிதர் அங்கு பிரசாரம் செய்து கொண்டிருந்திருக்கலாம். இங்கு ஒன்றும் தோட்டம் கிடையாது. கைதிகள்தான் இருக்கிறார்கள்” என்று அந்த மாதுக்குப்பதில் எழுதிவிடுவோம். சம்பவம் நடந்த ஆண்டில் நான் இங்கு தனித்திருந்தேன். தாங்கள் புத்தகம் படித்துக்கொண்டும் நூற்றுக்கொண்டும் இருந்தீர்கள். ஞாபக சக்தியின் மீது சந்தேகப்பட வேண்டியது சர்ஹென்றி தான்; ஏனென்றால் அவருடைய வயது என்னைக்காட்டிலும் அதிகம்” என்று கூறினார்.
மகாதேவ தேசாய், ”இம்மாதிரியான பதில் பெர்னாட்ஷா கொடுக்கலாம். நாம் எழுதும் பதிலில் சந்தோஷ அறிகுறியே புலனாகக்கூடாது.