கேலியாகவும் பொய் பேசக்கூடாது

7. கேலியாகவும் பொய் பேசக்கூடாது
---------------

1926ம் வருடத்தில் அப்பொழுதுதான் குடும்பஸ்தராகியிருக்கும் ஓர் இளைஞர் சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்க்வந்திருந்தார். குழந்தைகளிடத்தில் அவர் பிரபல்யமாகிவிட்டார்.
ஒரு நாள் அவர் எட்டுவயது பெண் குழந்தைக்கு வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். அவர் கையில் எலுமிச்சம் பழம் ஒன்று இருந்தது. அதைத்தான் எடுத்துக்கொள்ளலாமென்று அக்குழந்தை நினைத்தது. மேலும் கீழும் தடவிப்பார்த்தாள், சிரித்து கையிலுள்ளதை பிடுங்குவதற்கும் எத்தனித்தாள். ஆனாலும் வாலிபரிடமிருந்து அப்பழத்தை எடுத்துக் கொள்ளமுடியவில்லை. மிகவும் களைப்படைந்து அழ ஆரம்பித்துவிட்டாள். ஆஸ்ரமத்திலுள்ள ஓர்வியாதியஸ்தருக்காக அந்த எலுமிச்சம் பழம் இருந்தது. வாலிபருக்கு இப்பொழுது தர்மசங்கடமான நிலை. இந்தப்பழத்தை அக்குழந்தைக்கு கொடுத்துவிட்டால் வியாதியஸ்தரின் கதி என்ன ஆவது?

திடீரென்று நாடகபாணியில் அவ்வாலிபர் கையை சுழற்றினார். ‘பழத்தை நான் ந்தியில் வீசிவிட்டேன்” என்று குழந்தையிடம் கூறினார்.

அனால் உண்மையில் அப்பழ்த்தை தன் சாமர்த்தியத்தினால் சட்டைப்பையில் மறைத்துவைத்துக்கொண்டார். ”இப்பொழுது ந்தியில் அப்பழம் என்ன ஆகும்? நான் அதை தேடமுடியுமா?”

”இல்லை, அப்பழம் மூழ்கிவிட்டது” என்று வாலிபர் பதிலளித்தார்.

அவர்களுக்குள் மறுபடியும் சிநேகம் ஆகிவிட்டது. இருவரும் சேர்ந்தே வியாதியஸ்தர் தங்கியிருக்கும் குடிசை வரை சென்றனர். வழியில் வாலிபர் கைக்குட்டையை பையிலிருந்து எடுக்கும்போது எலுமிச்சம் பழமும் சேர்ந்து கீழே விழுந்து விட்டது. இதைப்பார்த்து குழந்தை அவரை கோபித்துக்கொள்ளவில்லை. மாறாக, துக்கமிகுதியால் அவரைப்பார்த்து ”நீங்கள் என்னிடம் பொய்பேசினீர்களா! பையில் பழத்தை மறைத்து வைத்துக்கொண்டு மூழ்கிவிட்டது என்று கூறினீர்களே! பாபுஜயிடம் நீங்கள் பொய்பேசுபவர் என்று சொல்வேன்” என்றாள்.

உண்மையாகவே காந்திஜியிடம் எல்லாவிஷயத்தையும் அக்குழந்தை கூறிவிட்டது. மாலைபிரார்த்தனைக்குப்பின் அவ்வாலிபரை காந்திஜி கூப்பிட்டார். விளையாட்டாக செய்த காரியம் இது என காந்திஜி புரிந்துகொண்டார். இருந்தாலும் வாலிபரிடம், ”நீ இவ்விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கேலியாக்க்கூட பொய் பேசிவிடக்கூடாது. சிரிப்பும் குதூகலத்தோடும் ஆரம்பமாகும் இச்சிறுவிஷயம் பின் வழக்கமாகவே ஆகிவிடக்கூடும்,” என அறிவுரை கூறினார்.

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (4-Nov-15, 4:19 pm)
பார்வை : 85

சிறந்த கட்டுரைகள்

மேலே