பாசமுள்ள விஷ துளிகள்
விடிந்தால் கல்யாணம்
கல்யாணமண்டபத்தில்
தவிப்புடன் நான் என்கண்கள்
அவனை தேடுகிறது
என்னையே ஏக்கமாக பார்த்துக்கொண்டு அவன்
நான் பார்க்கும் நேரம் பார்த்து
மின்னலென திருப்பி கொள்கிறான் முகத்தை
என் மனசுக்குள் கண்ணீர் அணைகள்
உடைந்து போன பிரளாயம்
ஊமையாக அழுகிறேன்
விரக்த்தியோடு மண்டபத்தின் மொட்டைமாடியில்
போகிறேன வானத்தை பார்க்கிறேன்
இறைத்து போட்ட தங்க காசுகளாக
வீண்மீன்களின் வர்ண ஜலம்
பிரகாசமாய் பொன் நிலவு
அதில் அவனோட.முகம் என்னை பார்த்து
சிரிக்கின்றன
கீழே பார்க்கிறேன்
வரிசையான கார்களுக்கு இடையில் அவன்
திகைத்து போகிறேன்
ஓடிபோக நான் வருவேன் என்று காத்திருக்கானோ
மன துள்ளலுடன் இறங்கி ஓடுகிறேன் கீழே
அவன் உள்ளே நுழைந்துக்கொண்டிருக்கிறான்
தம் அடிச்ச திருப்தியுடன்
நொந்து நூலாகிறேன்
விழித்துக்கொண்டே இருந்தேன்
தூக்கம் தொலைந்தவிழிகளுடன்
விடிந்து விட்டது அவனை தேடுகிறன கண்கள்
அவனும் வெறித்துக்கொண்டு எதையோ பார்க்கிறான்
வேறு வழி தெரியவில்லை
ஒரு முடிவோடு அவனை நெருங்குகிறேன்
முடிவை சொல்லிவிட்டேன்
தலையாட்டுகிறான்
திருமண நேரம் நெருங்கிவிட்டது
மணபெண் அறைக்கு செல்கிறேன்
அழகான அலங்காரம் எனக்கு
மணகோலத்தில் மணமேடை நோக்கி போகிறேன்
எதிரே அவன்
அவனை பார்த்து புன்னகைத்தேன்
அவனும் பதிலுக்கு புன்னகைக்கிறான்
பிறகு வாய்விட்டு சிரிக்கிறோம்
மண்டபமே அதிரும்படி இருவருமே
பலமாக சிரிக்கிறோம்
சுற்றி இருக்கும் கூட்டத்தை பார்த்தே சிரிக்கிறோம்
சிரித்துகொண்டே துடிக்கிறோம்
இருவருமே துடித்துக்கொண்டே
ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டே
மடிகிறோம்
ஆம்
சாதி என்ற அரக்கன் எங்களை பிரிக்க நினைச்சான
ஆனா உடலை தான் பிரிக்கமுடிஞ்சது
உயிரை மனசை பிரிக்கமுடியவில்லை சாதியால்.
எங்கள் உடல் சேரலைனாலும் உயிரை
ஒன்றாசேர்த்த
பாசமுள்ள விஷ துளிகள்